External Links

“நம்மைப் படைத்த இறைவன், நமது சிந்தனையிலும், திறமையிலும் பெரும் ஆற்றலையும்,
திறனையும் வைத்திருக்கிறான். இந்தச் சக்தியை வெளிக் கொணரவும்,
வளர்த்தெடுக்கவும் வழிபாடுகள் நமக்கு உதவுகின்றன.”

ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி- திண்ணை இணைய இதழில்…

ஹாங்காங்கின் ‘இந்திய இளம் நண்பர்கள் குழு ‘வால் செப்டம்பர் 2004-இல் துவங்கப்பட்ட இந்தத் ‘தமிழ் வகுப்பு ‘, ஹாங்காங்கின் இடப் பிரச்சனைகளையும் பணி அழுத்தங்களையும் மீறித் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள், சனிக்கிழமை மதியப் பொழுதுகளை 35-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது. தமிழைப் பாடமாகப் படிக்க இயலாத ஹாங்காங் சூழலில் இந்த முயற்சி கவனம் பெறுகிறது.

  1. மேலும்…

“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”-திண்ணை இணைய இதழில்…

புலம் பெயர்ந்த குடும்பங்களின் சிறுவர்கள் அன்னியக் கலாச்சாரத்தைச் சுவாசிக்கிறார்கள்; ஆங்கிலம் வழி கற்கிறார்கள்; காலப்போக்கில் தாய்மொழியை ஒரு வீட்டு மொழியாகப் போலும் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்துவிடுகிறார்கள். இந்தச் சூழலில் வாரந்தவறாமல் முறையாகத் தமிழ் படிப்பிக்கிற முயற்சி தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஒரு விதத்தில் இது அமைப்பாளர்களின் பொறுப்பை அதிகரித்தது. இரண்டாம் ஆண்டில் வகுப்புகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அவர்கள் விழைந்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

  1. மேலும்…

Talk: Tamil Language and Tamil Teaching:

Speech by Mu. Ramanathan, in a function conducted by the Young Indian Friends Club of Hong Kong to commemorate the shifting of their weekly Tamil Classes to the premises of Newman Catholic College at Yau Ma Tei. The meeting took place at the School auditorium on 3 November 2007. The school authorities and members from ethnic minority committees were present. The talk is mainly mainly intended to the Chinese audience who were present. The text can be found

  1. Here

இவர்களைப் பாராட்டாமல் யாரைப் பாராட்டுவது!

ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழுவினரின் தமிழ் வகுப்புத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, 26 மே 2007 அன்று கைஃபாங் நலச் சங்க அரங்கில் நடை பெற்றது. அது போது மு.இராமனாதன் வழங்கிய பாராட்டுரையை

  1. இங்கே படிக்கலாம்

காணொளியில் தமிழ்க் கல்வி

ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம தமிழ் வகுப்புத் திட்டத்தை எப்போதும் ஊக்குவிது வருகிறது. திட்டத்தின் மூன்றாம் ஆண்டு விழாவின் போது கழகம் வகுப்புகளைக் குறித்து ஒரு குறும்படம் வெளியிட்டது. அது You Tube-இல் வலையேற்றப் பட்டிருக்கிறது. அதைக் கீழே காணலாம்.

பகுதி 1:

பகுதி 2:

பகுதி 3:

ஹாங்காங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்-Wikisource பக்கம்…

ஹாங்காங்கில் கடந்த சில வருடங்களாக தமிழ் வகுப்புகளின் வருட நிறைவு நாளை விழாவாக எடுத்து வருகின்றனர். அத்துடன் “ஹாங்காங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மல”ரும் வெளியிடப்படுகின்றது. அந்நிய நாட்டுச் சூழமைவில் “தமிழ்” கல்விக்கான முக்கியத்துவம் கருதி “2004 – 2005 ம் ஆண்டு விழா மலர்” இல் உள்ளதை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே சிலப் பகுதிகளை கீழே தட்டச்சுவிடப்படுகின்றது.

  1. மேலும்…

ஹாங்காங்கில் தமிழ் “மொழி”- ஒரு வலைப்பூவில் இருந்து…

கொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்கள் அதாவது அவர்களுடைய மதம் இந்து, இசுலாம் எதுவாக இருப்பினும் நாம் தமிழர்கள் எனும் ஒரே குடையின் கீழ் நின்று தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு செம்மொழி அதை நமது குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தால் தான் அதன் அருமை பெருமைகளைக் காப்பாற்ற முடியும் என்ற நோக்கில் Young Indian Friends Club எனும் அமைப்பின் கொங்கொங் வாழ் தமிழ் இளைஞர்கள் தமிழ் மொழி வகுப்புகளை தன்னார்வ தொண்டாக ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

  1. மேலும்…